வணிகம்

அமெரிக்க நிறுவனத்தை வாங்கியது விப்ரோ

செய்திப்பிரிவு

சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமான விப்ரோ அமெரிக்காவைச் சேர்ந்த ஓபுஸ் கேபிடல் மார்கெட் கன்சல்டன்ட் எனும் நிறுவனத்தை 7.5 கோடி டாலருக்கு (ரூ. 467 கோடி) வாங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கை முழுமையாக நான்காம் காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் நிறைவடையும் என்று தெரிகிறது.

நிறுவனத்தின் சொத்து நிர்வாக தொழிலை மேலும் வலுப்படுத்த அமெரிக்க நிறுவனத்தை வாங்கியதாக விப்ரோ நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் உயர் நிலை சொத்து நிர்வாக பிபிஓ சேவையில் ஈடுபட வழியேற்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மனோஜ் புஞ்சா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT