நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாதி யிலும் மிகப் பெரிய எழுச்சியாக இருக்கும் என்று வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 600 கோடி டாலர் ( ரூ.40,350 கோடி) அளவுக்கு ஐபிஓ இருக்கும் என தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் க்விஸ் கார்ப் ஐபிஓ வெளியிட்ட போது 144 மடங்கு பரிந்துரை விண்ணப்பங்கள் பெற்றது.
மஹாநகர் கேஸ் பட்டியலிடப் பட்டதும் 30 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஐடி சேவை பிரிவான எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் 1200 கோடி திரட்ட திட்டமிட்டு ஜூலை 11 ஐபிஓ வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.