சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்.8 மற்றும் கேலக்சி எஸ்.8 பிளஸ் ஆகிய புதிய ஸ்மார்ட் போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்.8 ரக ஸ்மார்ட் போன்கள் ரூ.57,900 முதல் கிடைக்கும், கேலக்ஸி எஸ்8 பிளஸ் ரக போன்கள் விலை ரூ.64,900 என்பது குறிப்பிடத்தக்கது.
இவை தேர்ந்தெடுக்கப்பட்ட சில விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனில் சாம்சங் ஷாப் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் மே 5-ம் தேதி முதல் கிடைக்கும். இதற்கான புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த இரண்டு புதுரக ஸ்மார்ட்போன்களும் நேரடியாக ஆப்பிள் ஐபோன்களுடன் போட்டியில் இறங்குவதோடு, சோனி, எல்ஜி, மற்றும் அசுஸ் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களுடன் போட்டியில் இறங்குகிறது.
முழு டெஸ்க் டாப் அனுபவத்தை இந்த போன்கள் வழங்கும் என சாம்சங் இந்தியா சீனியர் துணைத் தலைவர் அசிம் வார்சி தெரிவித்தார்.
மேலும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8 பிளச் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் டபுள் டேட்டா வழங்கப்படும். மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ.309-க்கு பயனாளர்கள் 8 மாதங்களுக்கு 448ஜிபி 4ஜி டேட்டாக்கள் பெறலாம்.
எஸ்8 ரக போன்களுக்கு தென்கொரியாவில் மட்டும் 10 லட்சம் பேர் முன் கூட்டியே புக் செய்துள்ளனர், ஏப்ரல் 21 முதல் அங்கு விற்பனை தொடங்கியுள்ளது.
எஸ்.8 போனில் 5.8 இஞ்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் போன் பொத்தான்கள் கிடையாது. எஸ்8 பிளஸ் 6.2 இஞ்ச் திரை அமைப்பு கொண்டது.
வழக்கமாக ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இருக்கும் ஹோம் பட்டனை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக டச் சென்ஸிடிவ் பட்டன் ஒன்றை வைத்துள்ளது. அந்த இடத்தில், ஹோம் பட்டனுக்கான ஐகான் இல்லை என்றாலும், அந்த இடத்தை தொட்டால் ஹோம் ஸ்க்ரீன் வந்துவிடும்.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பயனர்களுக்கு உதவும் ஐஃபோன் சிரி, லூமியாவின் கொர்டானா போல, கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 ப்ளஸ் மொபைல்களில் பிக்ஸ்பி என்ற வசதி இருக்கும்.
மேலும் இதில் கண் அடையாளத்தை ஸ்கான் செய்யும் ஐரிஸ் ஸ்கானர், விரல்ரேகையை ஸ்கான் செய்யும் ஃபிங்கர்ப்ரிண்ட் ஸ்கானர் ஆகிய வசதிகளும் உள்ளன. சாம்ஸங் நாக்ஸ், சாம்ஸங்க் பே உள்ளிட்ட அம்சங்களும் இருக்கும்
எஸ் 8 மொபைலின் அம்சங்கள்
# 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டகோர் ப்ராசஸருடன், 4 ஜிபி ராம்.
# 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு இடமும், மெமரி கார்ட் மூலம் 256 வரையும் சேமிப்பு இடத்தை அதிகரித்துக்கொள்ளலாம்
# முதன்மை கேமரா 12 மெகாபிக்ஸல் மற்றும் செல்ஃபி ஃப்ரண்ட் கேமரா 8 மெகா பிக்ஸல்
# 3,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, எஸ்8+ல் இது 3,500 எம்.ஏ.ஹெச் பேட்டரியாக இருக்கும்.