வணிகம்

ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.87,000 கோடி டெபாசிட்: வரித்துறை ஆய்வு

பிடிஐ

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜன் தன் கணக்கில் ரூ. 87,000 கோடி டெபாசிட் செய்யப்பட் டுள்ளது குறித்து வரித்துறையினர் ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப் பட்ட அடுத்த நாளான நவம்பர் 9-ம் தேதி அன்று ஜன் தன் கணக்கில் மொத்த டெபாசிட் ரூ. 45,637 கோடியாக இருந்தது. தற்போது இது இருமடங்காக உயர்ந்து ரூ. 87,100 கோடியாக உள்ளது.

`பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப் பட்ட பிறகான முதல் இரு வாரங்களில் ஒரு வாரத்திற்கு ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ. 5,000 கோடி வரை டெபாசிட் ஆனது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு டெபாசிட் ரூ.1,000 கோடியாக குறைந்தது.

வரித்துறையினர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்று வதற்கு ஜன் தன் வங்கி கணக்கு களைப் பயனபடுத்தினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வரித்துறை எச்சரித்ததே டெபாசிட் குறைந்ததற்கு காரணம். பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜன் தன் வங்கி கணக்கில் டெபாசிட் இருமடங்காகியுள்ளது. அனைத்து ஜன் தன் கணக்குகளின் விவரங்கள் வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. வேறு ஒருவ ருடைய பணம் மற்றவர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப் பட்டிருப்பது கண்டிபிடிக்கப் பட்டால் உரிய நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும்’’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 4.86 லட்சம் ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை சிறிய அளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள் ளது. இதன் மொத்த தொகை ரூ. 2,022 கோடி. மேலும் நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை 48 லட்சம் ஜன் தன் கணக் கில் ரூ. 41,523 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த டெபா சிட் குறித்த தகவல்கள் வரித் துறையிடம் உள்ளன.

SCROLL FOR NEXT