வணிகம்

10 புதிய வழிகளில் இண்டிகோ விமான சேவை

ஐஏஎன்எஸ்

பயணிகள் விமான சேவையில் குறைந்த கட்டண நிறுவனமான இண்டிகோ கூடுதலாக 10 விமான வழி தட சேவையை அறிவித்துள் ளது. ஏர்பஸ் ஏ-320 நியோ ரக விமானங்களுக்கு அளித்திருந்த ஆர்டரில் 13 விமானங்களை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறு வனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: புதிய விமான வரவு மூலம் கூடுதலாக 10 விமான சேவைகளை அளிக்க உள்ளதாகவும், புதிய விமானம் டிசம்பர் 27 ஆம் தேதி டெலிவரி எடுக்கப்பட்டது என்றும் கூறியுள் ளது. இந்த புதிய விமானங் களுக்கு பிறகு நிறுவனம் 125 விமானங்களோடு இயங்கும். முக்கியமாக விமான நிறுவனம் தொடங்கி 125 மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வழித்தட தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப கூடுதலாக விமான சேவையை அளிக்க உள்ள தாகவும், ஏற்கெனவே உள்ள வான் வழி பாதைகளின் தேவைகளுக்கு ஏற்பவும் சேவைகளை அளிக்க உள்ளோம் என்று கூறியுள்ளது.

கூடுதலாக வழங்க உள்ள சேவைகள் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. 10 புதிய சேவைகளும் ஹைதராபாத்தி லிருந்து கோவா, கோயம்புத்தூர், புவனேஸ்வரம் மற்றும் விசாகப் பட்டினம் வான் வழிகளில் இருக்கும்.

125 மாதங்களில் 125 விமானங் கள் இயக்குகிறோம். இது எங்க ளது செயல்பாடுகளில் மிக முக்கிய மான மைல்கல் என்று நிறுவனத் தின் தலைவர் ஆதித்யா கோஷ் கூறினார். தொடர்ந்து சிறந்த விமான பயண அனுபவத்தை எங்க ளது பயணிகளுக்கு அளிப்போம் என்றும் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

          
SCROLL FOR NEXT