ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரியின் சம்பளம் கடந்த நிதியாண்டில் சற்றே அதிகரித்து ரூ.10 கோடி யாக உள்ளது. தவிர கடந்த நிதி யாண்டில் ரூ.57 கோடி மதிப்பிலான ஹெச்டிஎப்சி பங்குகளை அவர் விற்றிருக்கிறார். 2015-16 நிதியாண்டில் ஆதித்யா பூரியின் சம்பளம் ரூ. 9.73 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் அவரது மொத்த சம்பளம் ரூ.10.05 கோடியாக இருந்தது.
வங்கியின் 2016-17 ஆண்டு அறிக்கையின்படி பூரியின் ஒதுக்கப்பட்ட பங்குகளில் ரூ.57.42 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார். இதற்கு முன்பு பல ஆண்டுகளாகவே பூரிக்கான பங்கு ஒதுக்கீடு அனுமதிக்கப்
பட்டு வந்தது. ஆனால் ஒதுக்கீடு பங்குகளை கடந்த நிதி ஆண்டில் தான் பணமாக்கியுள்ளார். 2015-16ஆண்டில் ரூ.21.8 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றார்.
கடந்த நிதி ஆண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.14,549.70 கோடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து வங்கி பங்குகளின் விலை அதிகரித்ததால் ஆதித்யா பூரிக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் மூலம் அவருக்கான ஆதாயமும் உயர்ந்துள்ளது.
வங்கிகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 3.77 கோடியிலிருந்து 4.05 கோடியாக உயர்ந்துள்ளது. புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 52 கிளைகளாக உள்ளது.