வணிகம்

நாஸ்காம் புதிய தலைவராக ராமன் ராய் நியமனம்

பிடிஐ

இந்திய மென்பொருள் நிறுவனங் களின் சங்கத் தலைவராக (நாஸ் காம்) ராமன் ராய் நியமனம் செய் யப்பட்டிருக்கிறார். குவாட்ரோ (Quatrro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராமன் ராய் இருக்கிறார். தற்போதைய தலைவர் சிபி குர்நானியிடம் இருந்து தலைவர் பொறுப்பை இன்று ஏற்க உள்ளார்.

ராமன் ராய் கடந்த நிதி ஆண்டில் துணைத் தலைவராக இருந்தவர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதுதான் திட்டம் என அவர் தெரிவித்தார்.

துணைத் தலைவராக விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி மற்றும் நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

14,000 கோடி டாலர் மதிப் புள்ள இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல சவால்களை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில் நாஸ்காம் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT