இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி குறைந்திருக் கிறது இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டிருக் கின்றன. ஆனால் பெரிய அளவில் வேலை இழப்புகள் நடக்கவில்லை என இன்ஃபோசிஸ் நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பெரிய அளவில் வேலை இழப்புகள் இருப்பது போல தெரியவில்லை. பதவி உயர்வுகள் குறைக்கப் பட்டிருக்கின்றன. வளர்ச்சி குறை வாக இருக்கும் பட்சத்தில் உயர் பொறுப்புகளுக்கு பணியாளர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். இது வழக்கமான ஒன்றுதான். கடந்த 2001 மற்றும் 2008-ம் ஆண்டு களில் ஏற்பட்ட நெருக்கடி சமயத்தி லும் கூட இதுபோலவே நடந்தது.
வளர்ச்சி குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப் பாவில் மந்த நிலை உருவாகி இருக்கிறது. தவிர இந்த துறையின் அளவு பெரிதாக இருப்பதால் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. மேலும் விசா குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.
ஐடி துறையில் தொழிற்சங் கம் என்பது மோசமாக யோசனை யாகும். ஐடி பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு வேலை மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழிற்சாலையில் பணிபுரிபவர் களுக்கு சங்கம் ஏற்றதாக இருக்க லாம் என்றார்.
ஐடி துறையில் உயரதிகாரி கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில், இளைஞர் களின் வேலைகளை பாதுகாக்க லாம் என இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் நிறுவனர்களுள் ஒருவரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து கிரிஷ் கோபால கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிய அளவில் வேலை இழப்புகள் நடக்கவில்லை. அதனால் கருத்து ஏதும் கூற முடியாது என்றார்.
மேலும் ஐடி துறையில் பணி வாய்ப்புகள் இன்னும் இருக்கின் றன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட சில பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
அனைத்து பொருளாதாரமும் வேலை வாய்ப்புகளை உருவாக்கா மல் வளர்ந்து கொண்டே வரு கிறது. அதனால் வேலைகளை பாதுகாப்பதில் அனைத்து நாடு களும் உறுதியாக இருக்கின்றன.
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், ஐடி துறையில் 6 லட் சம் வேலைகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லாததால், அவர்கள் இந்தியா வுக்குதான் வருவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது என கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.