கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 77,000 கோடி டாலர் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பைனான்ஸியல் இன்டெகரிட்டி என்னும் நிறுவனத்தின் ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது.
அதேபோல இந்த காலகட்டத்தில் ரூ.16,500 கோடி டாலர் முறையற்ற பணம் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் 10,100 கோடி டாலர் கறுப்பு பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. அதே ஆண்டில் 2,300 கோடி டாலர் வெளியேறி இருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் முறையற்ற பண பரிமாற்றம் 1 லட்சம் கோடி டாலராக இருக்கிறது.
கடந்த 2005 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 5,50,000 கோடி டாலர். இதில் முறையற்ற வர்த்தகத்தின் பங்கு 3% என அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் 5.5 லட்சம் கோடி டாலர் முறையற்ற பணம் சீனாவுக்குள் வந்திருக்கிறது. ரஷ்யாவில் 1.7 லட்சம் கோடி டாலர், பிரேசிலில் 37,800 கோடி டாலர் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.