வணிகம்

வரி ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை அளித்துள்ளது ஹெச்எஸ்பிசி வங்கி

செய்திப்பிரிவு

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை மிகப் பெரிய வங்கியான ஹெச்எஸ்பிசி வரி அதிகாரிகளுக்கு தெரிவித் துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரி அதிகாரிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வரி அதி காரிகள் இணைந்து ஹெச்எஸ்பிசி வங்கியில் விசாரணை மேற்கொண்டதை அடுத்து வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில் நான்கு இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடங்கியுள்ளனர்.

முன்னதாக பனாமா பேப்பரில் வெளியான நிறுவனங்கள் மற்றும் நபர்களின் விவரங்களைப் பற்றி தெரிவிப்பதற்காக ஹெச்எஸ்பிசி வங்கி அமலாக்கத்துறையை அணுகியிருந்தது. பனாமா பேப்பரில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் குவித்திருந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமலாக்கத் துறையினர் ஹெச்எஸ்பிசி சுவிஸ் பிரைவேட் வங்கி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்புள்ள ஹெச்எஸ்பிசி நிறுவனங்களில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் வரி ஏய்ப்பு செய்தவர்களின் பற்றிய விவரங்களை வரி அதிகாரிகளுக்கு தெரிவித் துள்ளதாக ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை காரணமாக வங்கியின் நிதி நிலைமையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அத னால் ரூ.5,000 கோடி அள வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாகவும் ஹெச்எஸ்பிசி தெரிவித் துள்ளது.

SCROLL FOR NEXT