இந்தியாவில் உடனடியாக வாராக் கடன் வங்கி அமைக்க வேண்டியது அவசியம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர விந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ள தாவது: பொது சொத்துகளை மறு சீரமைக்கும் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்மொழி கிறேன், இதனால் வங்கிகளும் கடன்பட்ட நிறுவனங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வங்கிகளின் வாராக்கடன் விவ காரத்துக்கு மத்திய அரசு முன் னுரிமை கொடுக்க வேண்டும். வங்கிகள் வாராக்கடனை தள்ளு படி செய்ய வேண்டும் என்கிற அரசியல் அழுத்தங்களையும் சந்திக்கின்றன. இதனால் வங்கிகள் வாரக்கடனிலிருந்து மீள முடியவில்லை என்பதும் முக்கியமானது என்றார். வங்கி நிதிநிலை அறிக்கையிலிருந்து வாராக்கடனை நீக்குவதை தள்ளுபடி என வங்கிகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து குறிப்பிட்டவர், கச்சா எண்ணெய் விலை பேரல் 65 டாலர் வரை அதிகரிப்பது வரை கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.