வணிகம்

2 சதவீத வட்டி குறைப்பு தேவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

பிடிஐ

நிதி நெருக்கடியில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு அவசியம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். அதே சமயத்தில் ஒரே முறை வட்டியை குறைக்க வேண்டுமா அல்லது படிப்படியாக வட்டியை குறைக்க வேண்டுமா என்பது குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கு கின்றன. இந்தியாவின் ஏற்றுமதி யிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களுக்கு நிதி மிகப்பெரும் நெருக்கடியாக இருக்கிறது. வங்கிகளுக்கு செல்வது என்பது தீர்வாகாது. ஏனெனில் அங்கு வட்டி மிக அதிகம். 2 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்ய வேண்டும் இதனை சொல்வதற்கு எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. இந்தியாவில் கடனுக்கான வட்டி மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை.

சிறு நிறுவனங்களின் வளர்ச்சி கடனுக்கான வட்டி விகிதத்தால் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. ஒட்டுமொத்த வங்கித்துறையும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வர்த்தகத் துறை அமைச்சகத்துக்கு வரும் ஒவ்வொரு துறையை சார்ந்தவர் களின் முக்கிய கோரிக்கையே வட்டி குறைப்பு பற்றிதான் இருக் கிறது. இதுவரை ரிசர்வ் வங்கி குறைத்த ரெபோ விகிதத்தின் பலனை வங்கிகள் வாடிக்கையாளர் களுக்கு கொடுக்க வேண்டும். இது குறித்து மத்திய. நிதி அமைச்சரிடம் பேசி இருக்கிறேன்.

ஏற்றுமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி சலுகை திட்டம், சர்வதேச மந்த நிலையை எதிர்கொள்வதற்கு பெரிதும் உதவி யாக இருக்கிறது. ஏற்றுமதி கடின மாக இருந்தாலும், நிலையான வளர்ச்சி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வட்டியை குறைத்து உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஏப்ரலில் இருந்து ரெபோ விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. தன்னுடைய கடைசி நிதிக் கொள்கை கூட்டத்தில் (ஆகஸ்ட் 9) வட்டிவிகிதத்தில் எந்த வித மாற் றத்தையும் ரகுராம் ராஜன் செய்ய வில்லை. அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்க இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் நடக்க இருக்கிறது. புதிய கவர்னர் வட்டி விகிதத்தைக்குறைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

SCROLL FOR NEXT