பெரு நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாட்களை உயர திகாரிகள் மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்று கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.வேணுகோபால் சென்னையில் நேற்று வலி யுறுத்தினார்
இந்திய தொழிலக கூட்ட மைப்பின் தெற்கு மண்டல துணைக் குழு சார்பில் மேலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது: பொருளாதார தேக்க நிலை, தொழில் ரீதியான பிரச்சி னைகள், என கடந்த காலங்களில் தொழில் நிறுவனங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்தன.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறந்த வழி அதற்கான காரணங் களை புரிந்து கொள்வதுதான். பெருநிறு வனங்களில் புதியவர் களின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மனிதவள மேலாளர்கள் பணி யாட்களின் திறமையை கண்ட றிவது அவசியமான ஒன்று. தொழில் ரீதியான செயல்பாடுகள், திட்டமிடல் போன்றவற்றை மேலாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இதுமட்டுமன்றி பணியாட்களை நடத்துகிற விதமும் மிக முக்கிய மானது. வீட்டில் குழந்தைகள் சாப்பிடாமல் பசியில் இருக்கும் போது அவர்களை வீட்டுப்பாடம் செய்யச்சொல்லி நாம் கட்டாயப் படுத்த மாட்டோம். அதுபோல் பணியாட்களையும் அவர்களின் நிலைமையறிந்து மனித தன்மையுடன் அணுக வேண்டும். பணியாட்களை ஒரு இயந்திரம் போல் நடத்தக்கூடாது.
இன்னும் 30 ஆண்டுகளில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.
இதனால், இந்திய நுகர் வோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதை மனதில் கொண்டு வெளிநாட்டு நிறுவ னங்கள் இந்தியாவில் தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதற்கேற்ப இந்திய நிறுவனங்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.