வணிகம்

மீண்டும் கோலாரில் தங்கம் எடுக்க மத்திய அரசு திட்டம்

பிடிஐ

கடந்த 15 ஆண்டுகளாக மூடப் பட்டிருக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தை மீண்டும் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து செயல் பட்டு வந்தது. உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாக இது செயல்பட்டு வந்தது. 1880-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த இந்த சுரங்கம் 2001-ம் ஆண்டு மூடப்பட்டது.

தற்போது இந்தச் சுரங்கத்தில் 2.1 பில்லியன் டாலர் மதிப்புக்கு தங்கம் இருப்பதாக ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது ஆய்வில் தங்கம் இருப்பு உள்ள தாக தெரியவந்ததை அடுத்து மீண்டும் தங்கம் எடுப்பதற்கு கர்நாடகா அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது நிதி இல்லாமல் இருக் கும் சுரங்கத்தை மறு சீரமைக்கவும் நிதி வழங்கவும் எஸ்பிஐ கேபிடல் நிறுவனத்தை மத்திய சுரங்க அமைச்சகம் நியமித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வில் 900 டன் முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

2 டன் முதல் 3 டன் தங்கம் இந்தியாவிலிருந்தே எடுக்கப் படுகிறது. இந்நிலையில், மீண்டும் கோலாரிலிருந்து தங்கம் எடுக்கப்பட்டால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி குறையும் எனக் கூறப்படுகிறது.

‘கோலார் தங்கச் சுரங்கம் மிகப்பெரியது. அதில், இன்னும் பெருமளவுக்கு தங்கம் இருக்கிறது. இதன் மூலம் தங்க இறக்குமதி குறையும்’ என்றுசுரங்கத் துறையில் அதிகாரியாக இருக்கும் பல்விந்தர் குமார் கூறுகின்றார்.

SCROLL FOR NEXT