வணிகம்

இவரைத் தெரியுமா?- கென்னத் பிரைசர்

செய்திப்பிரிவு

சர்வதேச அளவின் மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மெர்க் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இதே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

அமெரிக்க பார்மசூடிகல்ஸ் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

ட்ரிங்கர் பிடில் நிறுவனத்தில் சட்டத் துறை நிபுணராக தனது பணியைத் தொடங்கியவர்.

அமெரிக்க சட்டத் துறை நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தவர்.

ஆண்டுக்கு 2.5 கோடி டாலர் சம்பளமாக இவருக்கு வழங்கப் படுகிறது.

சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகை மாற்றியவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

SCROLL FOR NEXT