வணிகம்

இ-காமர்ஸ் வருமானம் 3,800 கோடி டாலரை தொடும்: அசோசேம் கணிப்பு

பிடிஐ

இந்திய இ-காமர்ஸ் துறையின் வருமானம் 2016-ம் ஆண்டு 3,800 கோடி டாலராக இருக்கும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் கணித்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு 2,300 கோடி டாலர் மட்டுமே வருமானமாக இருந்த நிலையில் இந்த வருடம் 3,800 கோடி டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது.

இணையதள விரிவாக்கம், ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சாதகமான பொருளா தார சூழ்நிலை வளர்ந்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை, இகாமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு கொடுக்கும் சலுகை கள் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி இருக்கும் என்று அசோசேம் தெரிவித்துள்ளது.

அதேபோல மொபைல் காமர்ஸ் (மொபைல் மூலமாக வாங்குவது. எம்-காமர்ஸ்) வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த துறையின் முக்கிய மான மாற்றமாக எம்.காமர்ஸ் கருதப்படுகிறது. ஆன்லைன் மூலமாக கிடைக்கும் வருமானத் தில் 70 சதவீதம் மொபைல் மூலமாக வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இதில் மும்பைவாசிகள் ஆன் லைனில் அதிகம் வாங்குவதாகவும், இதனை தொடர்ந்து டெல்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் அதிகம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் இருப்பவர்களில் மூன்றில் ஒருவர் மொபைல் மூலமாக பொருட்களை வாங்குகிறார்கள்.

2015-ம் ஆண்டு ஆடைபிரிவு களில் அதிக வளர்ச்சி இருக்கிறது. முந்தைய 2014-ம் ஆண்டைவிட 2015-ம் ஆண்டில் இந்த பிரிவு 69 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து எலெக்ட் ரானிக்ஸ் பிரிவின் வளர்ச்சி 62 சதவீதமாகவும், குழந்தைகள் பிரிவு 53 சதவீத வளர்ச்சியும், அழகு சாதன பொருட்களின் வளர்ச்சி 52 சதவீதமாகவும், பர்னிச்சர் பிரிவு 49 சதவீத வளர்ச்சியும் அடைந்திருக்கிறது.

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களில் 45 சதவீதம் நபர்கள் பொருட்கள் வீட்டுக்கு வரும் போது பணம் கொடுப்பதையே விரும்புகிறார்கள். 16 சதவீதம் நபர்கள் கிரெடிட் கார்டையும், 21 சதவீத நபர்கள் டெபிட் கார்டையும் பயன்படுத்துகிறார்கள். 10 சதவீத நபர்கள் மட்டுமே இண்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துகிறார்கள். இதர ஏழு சதவீத நபர்கள் மொபைல் வாலட், கேஷ் கார்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள்.

2015-ம் ஆண்டு மொபைல் போன்கள், ஐபேட், எம்பி 3 பிளேயர், டிஜிட்டல் கேமரா மற்றும் நகைகள் அதிகம் விற்பனையானது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT