இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
சந்தை மதிப்பை அடிப் படையாக கொண்டு அதிக மதிப்பை மிக்க நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.4,60,291 கோடியாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,151 கோடி அதிகமாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,57,139 கோடியாக உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மிக அதிக மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றது. நான்கு வருடங்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை டிசிஎஸ் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.