வணிகம்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 10% உயர்வு

பிடிஐ

முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் செப் டம்பர் காலாண்டு நிகரலாபம் 10 சதவீதம் உயர்ந்து 341 கோடி ரூபாயாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 310 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் 17 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,224 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 2,596 கோடி ரூபாயாக இருக்கிறது.

இதர வருமானம், மற்ற முதலீடுகளில் இருந்து கிடைத்த வருமானம், வங்கி டெபாசிட் மீது கிடைக்கும் வட்டி ஆகியவை 38 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 22.79 கோடி ரூபாயாக இருந்த இதர வருமானம் இப்போது 31.49 கோடி ரூபாயாக இருக்கிறது.

SCROLL FOR NEXT