வணிகம்

500 டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க ஐசிஐசிஐ வங்கி திட்டம்: சாந்தா கொச்சார் தகவல்

செய்திப்பிரிவு

ஐசிஐசிஐ வங்கி 500 டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார் கூறியதாவது, ஐசிஐசிஐ வங்கி 100 நாட்களில் 100 டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 500 கிராமங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை கொண்டு செல்ல உள்ளோம் என்று கூறினார்.

100 கிராமங்கள் திட்டத்தின் மூலம், கிராம மக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளன. மேலும் மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான கடன் வசதிகளையும் இந்த திட்டம் கொண்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களைப் பார்த்து வங்கி இந்த திட்டத்தை தொடங்கியது.

இந்த 100 நாட்களில் 11,300 நபர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீதம் பேர் பெண்கள். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.14 கோடி வரையில் கடனுதவி அளிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மற்றொரு பகுதியாக மின்னணு பரிவர்த்தனை, இதர வணிக பரி வர்த்தனைகளுக்கு மின்னணு முறைகளை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகின் றன.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக டிசம்பர் 2017க்குள் 500 கிராமங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். 50,000 நபர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுக்க உள்ளோம்.

நவம்பர் 2016க்கு பிறகு இதை எங்களது இலட்சியத் திட்டமாக எடுத்துள்ளோம். 2015ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் அகோதரா கிராமம் முதல்முறையாக மின்னணு மயமாக்கப்பட்டது. இதனால் பணமதிப்பு நீக்க காலத்தில் இந்த கிராம மக்கள் பெரிய சிரமங்களுக்கு ஆளாகவில்லை. இதுவே இந்த திட்டத்தின் தொடக்கமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இதை ஏற்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த கிராமத்தினர் பணபரிவர்த்தனை மற்றும் இதர வர்த்தக நடவடிக்கைகளுக்கு சிரமங்களை அனுபவிக்கவில்லை.

நாட்டில் ரொக்க பண பயன் பாட்டை குறைக்கும் முயற்சியாக வும், அரசு மேற்கொண்டுவரும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாகவும் இது இருக்கும். எங்களது டிஜிட்டல் கிராம திட்டம் மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங் களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் பிஓஎஸ் இயந் திரங்கள், மைக்ரோ ஏடிஎம், கிராம அளவிலான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எஸ் எம் எஸ் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி களும் இந்த கிராம டிஜிட்டல் திட்டத்தில் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்ததாக செயல்படுத்த உள்ள 500 கிராமங்களில் 10 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் என்றும் கொச்சார் கூறினார்.

-பிடிஐ

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ’ஐசிஐசிஐ டிஜிட்டல் கிராமங்கள் 100’ திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சார்.

SCROLL FOR NEXT