குவிஸ் கார்ப் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களி டமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கிய ஐபிஓ காலம் ஜூலை 1-ம் தேதி முடிவடைந்தது. 1-ம் தேதி முடிவில் 145 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. இந்த ஐபிஓ மூலம் 400 கோடி ரூபாயை திரட்ட குவிஸ் கார்ப் திட்டமிட்டிருந்தது. ஆனால் 31,000 கோடி ரூபாய் அளவுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக் கப்பட்ட பங்குகளுக்கு 33 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தி ருந்தன. ஒரு பங்கின் விலையாக ரூ.310 முதல் ரூ.317 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பெங்களூருவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அஜிஸ் இசாக் மற்றும் தாமஸ் குக் ஆகியோரின் முயற்சியால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் தைரோ கேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு 73.46 மடங்குக்கு விண் ணப்பங்கள் குவிந்தன. டீம்லீஸ் சர் வீசஸ் நிறுவனத்துக்கு 66 மடங் குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
இதற்கு முன்பாக ரெலிகர் என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. 2007-ம் ஆண்டு வெளியான இந்த ஐபிஓவுக்கு 158 மடங்குக்கு விண் ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த 2000-ம் ஆண்டு சன்க்யா இன்போ டெக் என்னும் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு 283 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்ததே அதிகபட்சமாகும்.
குவிஸ் கார்ப் நிறுவனத்தில் தாமஸ் குக்கின் பங்கு 67.82 சதவீத மாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 3,442 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் இருந்தது. நிகர லாபம் 88.5 கோடி ரூபாயாகும்.