விமான எரிபொருள் விலை 5.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக விமான எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 2,557 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 49,287 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதமும் 9.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் விமான எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், அதற்கு முன்பு இருந்த விலையை விட இப்போது 25 சதவீதம் அல்லது ஒரு கிலோலிட்டர் 9,985 ரூபாய் அதிகரித்துள்ளது. இருந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைவுதான்.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.64.76 மற்றும் டீசல் விலை ரூ.54.70 ஆகும். ஆனால் விமான எரிபொருள் விலை ஒரு லிட்டர் 49.28 ரூபாய் மட்டுமே. விமான நிறுவனங்களின் செயல் பாட்டு கட்டணத்தில் எரிபொருள் விலை மட்டுமே 40% ஆகும்.