முதலீட்டாளர்களின் நலனைக் காக்க பொதுப் பங்கு வெளியிடும் நிறுவனங்கள், தங்களைப் பற்றி கூடுதல் தகவலைச் சேர்க்க வேண்டும் என பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கென வெளியிடும் மாற்றத்தக்க கடன் பத்திரங்களின் விலையை நிர்ணயிப்பதில் எத்தகைய வழிமுறைகள் பின் பற்றப்பட்டன என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு நிறுவனங்களை செபி கேட்டுக் கொண்டுள்ளது. புதிய நிறுவன விதிகளின்படி பட்டியலிடப்பட்ட பங்குகளை செபி தான் இறுதி செய்யும். இதேபோல இனி வரும் காலங்களில் முதன்மை பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள், அதுபற்றி குறிப்பிட்டுள்ள தகவல்களை செபி ஆராயும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டுவதற்கான வழிமுறை களை நிறுவனங்களுக்கு செபி எளிமையாக்கியுள்ளது. அதே சமயம் முதலீட்டாளர் நலன் காப்பது மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள் அதுபற்றிய தகவலை அறிக்கை யாக வெளியிடும். இதற்கான வழிகாட்டுதலை செபி எளிமை யாக்கியுள்ளது. பங்கு வெளியிடும் நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான நடவடிக்கையை செபி மேற்கொண் டுள்ளது. இப்போது பொதுப் பங்கு வெளியிடுவதற்கு உதவும் வணிக வங்கி மூலமாகத்தான் செபி தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள் அது தொடர்பான விவரங் கள், திரட்டப்படும் நிதிகள் உள்ளிட்டவற்றை இதற்கு உதவியாக இருக்கும் வணிக வங்கிகள் தான் மேற்கொள்கின்றன. இதற் குப் பதிலாக நேரடியாக தொடர்பு கொள்வது குறித்து செபி ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலீட்டாளர்களின் நலனைக் காப்பதற்காக, பங்கு வெளியீடு தொடர்பான விவரங்களில் முக்கியமான விவரத்தின் முக்கியத் துவத்தை செபி ஆராயும். விலை நிர்ணயம் தொடர்பாக கடைப் பிடிக்கப்பட்ட வழிமுறையை செபி ஆராயும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஓ ஆவணங்களை தன்னிச்சையாக நிராகரிக்கும் வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் தவறான நிறுவனங்களை பங்குச் சந்தையில் நுழைய விடாமல் தடுப்பதோடு, முதலீட்டாளர்களின் நலனையும் காக்க முடியும் என செபி நம்புகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு, சிறந்த முதலீட்டை தேர்வு செய்யவும் வழி ஏற்படுத்த செபி திட்டமிட்டுள்ளது.
முழுவதும் மாற்றத்தக்க பங்குகளை தேர்வு செய்வது முதலீட்டா ளர் விருப்பமாக அளிப்பது மற்றும் சில கடன் பத்திரங்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் முதலீட்டாளர்களின் நலனைக் காக்க முடியும் என உறுதியாக நம்புகிறது. பொதுப் பங்கு வெளியீடு குறித்து ஏற்கெனவே செபி சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி பங்குச் சந்தையில் பட்டியலிட்ட ஆறு மாத காலத்தில் குறிப்பிட்ட நிறுவன பங்கு விலை சரிந்தால் சிறு முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவன மேம்பாட்டாளர்களே பொதுப் பங்கு விலையில் பங்கு களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
பொதுப் பங்கு வெளியிடும் நிறுவனங்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை சில நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. பொதுப் பங்கு வெளியிடும் முதன்மைச் சந்தையில் தேக்க நிலை காணப்படுவதால், பெரும் பாலான நிறுவனங்கள் பங்கு வெளியிட தயக்கம் காட்டி வருகின்றன. இதை ஊக்குவிக்கும் விதமாக மின்னணு முறையில் ஐபிஓ படிவங்களைப் பெறும் வசதியை அறிமுகப்படுத்த செபி அனுமதித்தது. இதன்படி புரோக்கர் மூலம் படிவங்களை முதலீட்டாளர்கள் பெற முடியும்.
ஒவ்வொரு சிறு முதலீட்டாளரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை வாங்க முடியும். இதேபோல சிறு முதலீட்டாளர்கள் குறைந்த கட்டணத்தி‑லான டி-மேட் கணக்குகளை நிர்வகிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.