வணிகம்

இவரைத் தெரியுமா?- சந்தீப் தர்

செய்திப்பிரிவு

மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து இந்தப் பொறுப்பில் செயல்படுகிறார்.

அமெரிக்க சில்லரை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ-வின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

டெஸ்கோ நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 12 நாடுகளில் 6,700 கிளைகளில் தகவல் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தினார்.

ஹோட்டல் புக்கிங் சேவைகளை வழங்கும் ஸ்டேயோலஜி என்கிற செயலியை 2015-ல் அறிமுகப்படுத்தினார்.

எம்பசிஸ், ஏபிஎன் அம்ரோ, சிட்டிபேங்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நாஸ்காம் அமைப்பில் செயல் உறுப்பினர். பெங்களூரு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பில் நிர்வாக குழு உறுப்பினர்.

புதுடெல்லி பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டமும், காஸியாபாத் ஐஎம்டி கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியல் பட்டமும் பெற்றுள்ளார். வார்ட்டன் பிசினஸ் பள்ளியில் நிர்வாகவியல் உயர்கல்வி முடித்தவர்.

SCROLL FOR NEXT