எரிவாயு இறக்குமதியில் முக்கிய நிறுவனமான பெட்ரோநெட் வங்கதேசத்தில் ரூ.5,000 கோடியில் எரிவாயு முனையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தின் குடுப்தியா தீவில் ரூ.5,000 கோடியில் புதிய எரிவாயு முனையத்தை அமைக்க உள்ளது. வங்கதேச நாட்டின் எரிவாயு தேவைக்கு ஏற்ப இந்த முனையத்தை தொடங்குகிறது.
ஆண்டுக்கு 50 லட்சம் டன் எரிவாயு கொள்ளளவு திறனை கொண்ட வகையில் கட்டுமான பணிகள் உத்தேசிக்கப்பட்டுள் ளன. இந்த இறக்குமதி முனையம் குடுப்தியா தீவில் அமைய உள்ளது என்று பெட்ரோநெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரபாத் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த முனையம் தவிர 3.5 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட முனையம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் எரிவாயுவுக் கான தேவை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மின் உற்பத்தி அதிகரிக்க தேவையாக உள்ளது. சமீபத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வங்கதேச தலைநகர் டாக்கா சென்று வந்த சூழ்நிலையில் 50 லட்சம் டன் கொள்ளளவு திறன் கொண்ட முனையத்தை அமைக்க முன்வரைவு அளித்துள்ளோம் என்றும் சிங் குறிப்பிட்டார்.
இதற்கு வங்க தேச அரசிட மிருந்து உடனடியாக பதில் வந்தது, இதையொட்டி மீண்டும் இந்த மாதத்தில் டாக்கா சென்ற நிறுவனம் தங்களது திட்டங்களை அளிக்கவுள்ளோம்.
சர்வதேச அளவில் எரிவாயு இறக்குமதி செய்து வங்கதேச தேவைக்கு விநியோகம் செய்யும் வேலைகளில் ஈடுபடுவோம். என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அளவிலான 5 மின் உற்பத்தி நிறுவனங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோநெட் நிறுவனமும் ஒன்று. தவிர சீனா, பெல்ஜியம், ஜப் பான் மற்றும் டச்சு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பரிசீலனையில் உள்ளன.
வங்கதேசம் தவிர லங்கா வின் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப 10 லட்சம் மெட்ரிக் டன் எரிவாயு முனையத்தை அமைப்பதற்கான முன்வரைவையும் பெட்ரோநெட் நிறுவனம் அளித்துள்ளது.