வணிகம்

சமூக சேவையில் அசிம் பிரேம்ஜி முதலிடம்

செய்திப்பிரிவு

சமூகசேவைக்கு அதிக தொகையை செலவிடுபவர்களில் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் மட்டும் இவர் 8,000 கோடி ரூபாயை சமூக சேவைக்காக செலவிட்டிருக்கிறார். ஹெச்.சி.எல். குழும தலைவர் ஷிவ் நாடார் ரூ. 3000, கோடியை செலவிட்டிருக்கிறார். ஜி.எம்.ஆர். குழுமம் தன்னுடைய அறக்கட்டளை மூலம் ரூ 740 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. நந்தன் மற்றும் ரோஹினி நிலகேனி தங்கள் பங்குக்கு ரூ 530 கோடியை செலவு செய்திருக்கிறார்கள்.

கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 கோடி ரூபாய்க்கு மேல் 31 இந்தியர்கள் சமூக சேவைக்காக செலவிட்டிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT