வணிகம்

வாராக்கடன் ஒதுக்கீட்டால் வங்கிகளின் லாபம் குறையும்: எஸ் எஸ் முந்த்ரா கருத்து

பிடிஐ

வாராக்கடன் ஒதுக்கீடு அதிகரிப் பால் வங்கிகளின் லாபம் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ் எஸ் முந்த்ரா கூறியுள்ளார். வாராக்கடன் அளவை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வழிகாட்டு தல்களை வங்கிகளுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சில வங்கிகள் தங்களது வாராக்கடன் அளவை குறைத்துள்ளன என்றும் கூறினார்.

நிதிக் கொள்கை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இதைக் குறிப்பிட்டார். ஒட்டு மொத்தமாக வங்கிகளின் செயல் பாட்டு லாபத்தில் நல்ல முன்னேற் றம் காணப்படுகிறது. ஆனால் நிகர லாபத்தில் தொடர்ந்து வங்கிகள் இன்னும் நெருக்கடியில்தான் உள்ளதாக கருதுகிறேன். எனினும் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

வங்கிகளில் நிதிநிலைமை குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து வங்கிகளின் மூன் றாவது காலாண்டு முடிவுகளும் இன்னும் வரவில்லை. வாராக் கடனை பொறுத்த வரை சில வங்கிகள் மொத்த வாராக்கடன் அளவை குறைத்துள்ளன. கடந்த சில காலாண்டுகளில் முதல்முறை யாக வாராக்கடன் விகிதம் குறைந் துள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் உள்ளன. நடப்பு காலாண்டில் சில வங்கிகள் வாராக்கடனை குறைக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மொத்த வாராக்கடன் அளவு குறைத்துள்ளது, அடுத்தடுத்து நிகர வாராக்கடன் அளவும் வங்கிகள் மேற்கொள்ளும் நட வடிக்கையால் குறையும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT