வணிகம்

ராபர்ட் ஷில்லர் - இவரைத் தெரியுமா?

செய்திப்பிரிவு

#பொருளாதாரத்துக்கு ஆல்பிரெட் நோபலின் நினைவாக பரிசு இந்த வருடம் மூன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஷில்லரும் ஒருவர்.

#மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பி.ஏவும். எம்.ஐ.டி.யில்(Massachusetts Institute of Technology) முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர்.

#யேல் பல்கலைகழகத்தில் பொருளாதார மற்றும் நிதித்துறையின் பேராசிரியராக இருக்கிறார்.

#2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் சரிவு (டாட்காம் பபுள்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்தவர்.

#நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கியமான நாளிதழ்களில் பொருளாதாரம் தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

#Finance and the Good Society, Irrationa# Exuberance, The Subprime So#ution உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

#சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகள் உள்ளிட்ட பல முக்கியமான பங்குச் சந்தைகள் உச்சமான விலையில் வர்த்தகமாகிறது என்று இவர் தெரிவித்த கருத்து பங்குச் சந்தை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT