நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் நடந்த ரூ.5,600 கோடி பண மோசடி வழக்கில் பைனான்ஸி யல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா கைது செய்யப் பட்டார். அமலாக்கத்துறை இவரை கைது செய்தது. வழக்கு விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காதது மற்றும் அவருக்கு எதிராக புதிய ஆதா ரம் கிடைத்திருப்பது ஆகிய காரணங்களால் கைது செய்யப் பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இந்த வழக்கில் இரண்டாவது முறையாக ஜிக்னேஷ் ஷா கைது செய்யப்படுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடப்பட்டார்.
இதன் காரணமாக பைனான் ஸியல் டெக்னாலஜீஸ் பங்கு நேற்றைய வர்த்தகத்தின் இடையே 8.45 சதவீதம் வரையில் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 6 சதவீதம் சரிந்து 85.60 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது. இந்த சரிவினால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.24.57 கோடி சரிந்து ரூ.394 கோடியாக இருக் கிறது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்துவந்திருக்கும் சூழலில் இந்த கைது ஏன் என்பது எங்களுக்கு புரியவில்லை என்று பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.