வணிகம்

250 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இண்டிகோ ஒப்பந்தம்

ஐஏஎன்எஸ்

தனியார் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் 250 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விமான நிறுவனம் மிக அதிக எண்ணிக்கையிலான விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடுவது இது முதல் முறையாகும்.

ஏர்பஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பிராண்டான ஏ-320 நியோ ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான விமானங்களை வாங்குவதே வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தடையற்ற விமான சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை எட்டுவதற்குத்தான் என்று இண்டிகோ நிறுவனத்தின் தலைவர் ஆதித்ய கோஷ் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் குர்காவ்னை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. தினசரி 530 விமான சர்வீஸ்களை இயக்கும் இந்நிறுவனம் மொத்த விமான பயணிகள் சந்தையில் 32 சதவீதத்தைப் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT