வணிகம்

நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நிறுவனர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கருத்து

செய்திப்பிரிவு

நிறுவனத்தை நிறுவியவர்கள் எப் பொழுதும் நிறுவனத்துடன் உணர்வு பூர்வமாக இணைந்திருப்பார்கள் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான கிரிஸ் கோபாலகிருஷணன் தெரி வித்துள்ளார். நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நிறுவனத்துடன் உணர்வு பூர்வமாக இணைந்திருப் பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள இந்தி யன் ஸ்கூல் ஆப் பிசினஸ் பள்ளி யில் கலந்து கொண்ட அவர் பேசி யதாவது: வாழ்நாள் சாதனையாக நீங்கள் உருவாக்கியதில் இருந்து உணர்வு பூர்வமாக வெளியேற முடி யாது. ஆனால் நீங்கள் கட்டாயமாக இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒன்றோடு உங்களது இணைப்பை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் உங்களால் நிறுவப்பட்ட நிறுவனத்தை விட்டு மனதளவில் வெளியேற முடியாது.

இன்ஃபோசிஸ் நிறுவனத் துடைய நிறுவனர்கள் குழு மாற்றத் திற்கு தயாராக இருந்தது. அதன் பிறகே அங்கிருந்து வெளியேறி னோம். இன்ஃபோசிஸ் உருவாக்கிய போது தொழில்முறையாக இயங்கக் கூடிய நிறுவனங்கள் நிறைய இல்லை. அதனால் தொழில்முறை யாக இயங்கும் தலைவர்களை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தோம். இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் குழு ஓய்வு பெறுவ தற்கு 60-வயதை நிர்ணயித்தோம். நிறுவனர்கள் ஓய்வு பெற்ற பிறகே விஷால் சிக்கா தேர்வு செய்யப் பட்டார். நிறுவனர்கள் நிறுவனத்தை விட்டு எந்த காலத்திலும் வெளி யேறலாம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT