தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை கள், புதன் கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. ஆனாலும் சர்வதேச காரணங்களால் சரிவில் வர்த்தகம் முடிந்தது. வர்த்தகத் தின் முடிவில் சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 22417.80-ல் முடிந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 6696 புள்ளிகளில் முடிந்தது.
உக்ரைன் பிரச்சினை, லாபத்தை வெளியே எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. மேலும் புதன் கிழமை அமெரிக்க பெடரல் கூட்டம் (எஃப்.ஓ.எம்.சி.) முடிவடைகிறது. ஊக்க நட வடிக்கை குறைப்பு பற்றிய முடிவு எடுக்கப்படும் என்ற பயமும் சேர்ந்து சந்தையை சரித்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை ஊசலாடியது. அதிகபட்சமாக 22,680 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக 22284 புள்ளி கள் வரையிலும் சென்செக்ஸ் சென்றது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் கடுமையாக சரிந்தன. பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு 1.1 சதவீதமும், பி.எஸ்.இ. ஸ்மால்கேப் குறியீடு 1.65 சதவீதமும் சரிந்தன.
ரியால்டி குறியீடு அதிகபட்ச மாக 5 சதவீதம் வரை சரிந்தது. இதை தொடர்ந்து பவர், கேப்பிடல் குட்ஸ் ஆகிய குறியீடுகள் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஹீரோ மோட்டோ கார்ப், ஓ.என்.ஜி.சி., ரெட்டீஸ் லேப், டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய பங்கு கள் உயர்ந்தன. மாறாக டாடா பவர், பி.ஹெச்.இ.எல்., சேசா ஸ்டெர்லைட், பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி ஆகிய பங்குகள் சரிந்தன.
ஆசியாவின் முக்கியமான சந்தையான நிக்கி, ஷாங்காய் காம்போசிட் ஆகியவை சிறி தளவு உயர்ந்தன. மகாராஷ்டிர மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தை களுக்கு வியாழக்கிழமை விடுமுறையாகும்.