வணிகம்

விதிமீறல்: யூகோ வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை

செய்திப்பிரிவு

யூகோ வங்கி விதிமீறலில் ஈடுபட் டுள்ளது தெரிய வந்துள்ளதால் அந்த வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வாடிக்கையாளருக்கு நடப்பு கணக்கு தொடங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்த விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கணக்கு வைத்திருக் கும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி சலுகையை எவ்வித கடன் வழங்கும் வசதியையும் அளிக்காமல் அளித்துள்ளது. இதனால் நடப்புக் கணக்கு நிதியில் எவ்வித தொகையும் இல்லாது போகும்.

இது தொடர்பாக யூகோ வங்கி யின் கணக்கு ஆவணங்களை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த போது வங்கியின் கிளைகளில் 2015-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங் களில் இத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில் விளக்கம் கோரும் நோட்டீஸ் யூகோ வங்கிக்கு அனுப்பப்பட்டது. யூகோ வங்கி அளித்த கடன் அளிப்பு கடிதம் (எல்சி) நான்கு கடிதங்கள் யூகோ வங்கிக் கிளைகளிலிருந்து கைப்பற்றப்பட்டன.

வங்கி அளித்த விளக்கத்தை ஆய்வு செய்த ஆர்பிஐ, விதிமுறை களை வங்கி மீறியிருப்பதால் அபராதம் விதிக்க முடிவு செய்தது.

வங்கி ஒழுங்குமுறை விதிகளின் படி இது சேவை குறைபாடாகும். மேலும் வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையிலான பரிவர்த்தனையில் நம்பகத் தன்மை ஏற்பட வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டே விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT