வணிகம்

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழி காட்டும்: தொழிலதிபர்கள் கருத்து

செய்திப்பிரிவு

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசோசேம் தலைவர் ராணா கபூர் கூறும் போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என்று கூறினார். ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா பேசும் போது, தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் செய்வதற்கான சூழ்நிலைகள் தமிழகத்தில் இருக்கிறது.

மேலும் தமிழக அரசின் நடவடிக் கைகளை ஃபிக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார். தமிழக தொழக கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வேணு னிவாசன் கூறும் போது இருசக்கர, கார், டிரக் என்ற எந்த பிரிவை எடுத்துக்கொண்டாலும், ஆட்டோ மொபைல் துறையின் முக்கிய நகரமாக சென்னை திகழ்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT