வணிகம்

ராஜனை மறு நியமனம் செய்வது சிறந்த முடிவு: சிஐஐ தலைவர் நௌஷத் போர்ப்ஸ் கருத்து

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சில பாஜக தலைவர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் நௌஷத் போர்ப்ஸ், ராஜனை மறு நியமனம் செய்வது சிறந்த முடிவு என்று கூறியிருக்கிறார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி யின் ஆறு நாள் ஜப்பான் பயணத் தில் பல துறைகளை சேர்ந்தவர்கள் சென்றிருக்கின்றனர். அதில் நௌஷத் போர்ப்ஸும் ஒருவர். அவர் மேலும் கூறியதாவது.

கொள்கைகளை விமர்சிக்க லாம் ஆனால் தனிப்பட்ட முறையி லான விமர்சனம் கண்டனத்துக் குரியது என்று முன்பு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அதையே நானும் கூறுகிறேன் தனிப்பட்ட முறையிலான விமர்சனம் தேவையற்றது.

ராஜன் நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவர் மறுநியமனம் செய்யப்பட்டால், அது சாதகமான முடிவாக இருக்கும். மத்திய அரசு சரியான சமயத்தில் இது குறித்த முடிவை அறிவிக்கும் என்று நினைக் கிறேன்.

ராஜன் மீது சுவாமி கூறிய கருத்துகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜனநாயக நாட்டில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது என்ற அளவில்தான் இதை எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.

ஜேட்லி கருத்து

முன்னதாக நிதி அமைச்சர் ஜேட்லி கூறும்போது பிரச்சினை அடிப்படையிலும் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை விமர்சிக்கலாமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கன்டனத்துக்குரியது. தனிப்பட்ட முறையில் கூறப்பட்ட கருத்துகள் எதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் கவர்னர் பதவி ஆகியவை இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமானவை ஆகும் என்றார்.

மேலும் மக்கள் அனைத்து விஷயங்கள் மற்றும் கொள்கை ளை பற்றி விவாதிக்கலாம், அதற்கான உரிமை அனைவருக் கும் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது அந்த பிரச்சினையின் தன்மையைக் குறைத்துவிடும் என்றார்.

முந்தைய அரசால் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, ராஜனின் கொள்கை முடிவுகள் காரணமாக வளர்ச்சி பாதிக்கிறது மற்றும் அவர் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT