வணிகம்

புதிய தொழில்களில் முதலீடு செய்ய பிளிப்கார்ட் திட்டம்

செய்திப்பிரிவு

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சமீபத்தில் 9,000 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. டென்சென்ட், மைக்ரோசாப்ட் மற்றும் இபே ஆகிய நிறுவனங்களில் இருந்து இந்த முதலீட்டை திரட்டியது. இந்த தொகையை `போன்பீ’ உள்ளிட்ட புதிய தொழில்களில் முதலீடு செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: போன்பீ மற்றும் பைனான்ஸியல் டெக்னாலஜி பிரிவுகளில் புதியதாக திரட்டப்பட்ட நிதி முதலீடு செய்யப்படும். பேமென்ட் பிரிவுகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர மளிகை பிரிவு, பர்னிச்சர் உள்ளிட்ட பிரிவுகளிலும் முதலீடு செய்ய இருக்கிறோம். இபே நிறுவனத்துடன் இணைந்திருப்பது தேவையானது. இதன் மூலம் இந்திய விற்பனையாளர்கள், இபே மூலமாக மற்ற நாடுகளுக்கு விற்க முடியும். இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றார்.

SCROLL FOR NEXT