நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத் துக்குள் கட்டுப்படுத்துவது என்பது மிக கடினமானது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்று சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தற்போது பணவீக்கம் மிக குறை வான அளவிலேயே இருக்கிறது. 5 சதவீதத்துக்கும் கீழே தற்போது இருக்கிறது. ஆனால் இதை விட பணவீக்கம் குறைய வாய்ப்பில்லை. அதனால் 2018-ம் ஆண்டுக்குள் பணவீக்கத்தை 5.8 சதவீதத்தி லிருந்து 4 சதவீதத்திற்கு கொண்டு வருவது என்பது 8 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக குறைப்பதை விட மிக கடினமானது. இவ்வாறு சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத நிதிக் கொள்கை கூட்டத்தில் ரகுராம் ராஜன், பணவீக்கம் பாதுகாப்பான நிலையில் இல்லை என்று கூறி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று அறிவித்தார். ஆனால் பருவ மழை நன்றாக இருந்தால் வட்டி விகிதம் குறைக்க வாய்ப்புள்ளது என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.