வணிகம்

இவரைத் தெரியுமா?- லாரண்ட் லீ மோல்

செய்திப்பிரிவு

பேயூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் வரை பேபால் நிறுவனத்தின் ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

இதே நிறுவனத்தின் உத்திகள் மற்றும் தொழில் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர்.

2003-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை இபே இங்கிலாந்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்திகள் வகுக்கும் பிரிவுக்கு தலைவராக இருந்தவர்.

டேலண்ட் மேனஜேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

மெக்கன்ஸி நிறுவனத்தில் தொழில் ஆய்வாளராக இருந்தவர்.

லண்டன் பிஸினஸ் கல்வி மையத்தில் நிதி நிர்வாக சேவைப் படிப்பில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT