வணிகம்

‘பண மதிப்பு நீக்கம் காரணமாக புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன’

செய்திப்பிரிவு

பண மதிப்பு நீக்கம் காரணமாக வீட்டுக்கடன் பிரிவில் சிறிய பாதிப்பு கள் உருவானாலும் நீண்ட கால அடிப்படையில் புதிய வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக டிஹெச் எப்எல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷில் மேத்தா கூறினார். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர், பண மதிப்பு நீக்கம், வீட்டுக்கடன் சூழல் உள் ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதி லிருந்து...

பண மதிப்பு நீக்கத்தால் தொடக்கத்தில் சில பாதிப்புகள் உருவானது. அக்டோபர் மாதத் துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதம் வீட்டுக்கடன் வழங்குவது 8 சதவீதம் அளவுக்கு எங்களுக்கு குறைந்திருந்தது. மக்கள் பணத்தை மாற்றுவதில் முழு கவனமும் செலுத்தியதால் எங்களால் வீட்டுக் கடன் வழங்கமுடியவில்லை. ஆனால் டிசம்பரில் வீட்டுக்கடன் வழங்குவது உயர்ந்தது. அக்டோ பர், நவம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந் திருக்கிறது. (2015 ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது).

வட்டி விகிதங்கள் குறைந்திருப் பதால் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் வாடிக்கையாளர் களுக்கு உயர்ந்திருக்கின்றன. அத னால் எங்களுக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. பண மதிப்பு நீக்கம் காரணமாக எங்களுடைய வளர்ச்சி இலக்கில் நாங்கள் எந்த மாறுதலையும் செய்யவில்லை.

நாங்கள் பட்ஜெட் வீட்டுக்கடன் களில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் சராசரியாக கொடுக்கும் வீட்டுக்கடன் அளவு ரூ.12 லட்ச அளவில் இருக்கிறது. ஏற்கெனவே பட்ஜெட் வீடுகளுக்கு இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. ஆனால் ஒற்றை சாளர முறையில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில்தான் பட்ஜெட் வீடுகள் அதிகமாகும்.

இன்று குறுகிய காலத்தில் வீடு கட்டும் தொழில் நுட்பம் இருக்கிறது. ஆனால் பட் ஜெட் வீடுகள் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் அனுமதிக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தால், அந்த திட்டத்தில் அந்த நிறுவனங் களுக்கு லாபம் இல்லாமல் போகும். அதனால் விரைவில் அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் இந்தியாவில் வளர்ச்சி

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு எங்களுடைய வளர்ச்சி விகிதம் இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியாவில் அதிக மாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலத் தில் எங்களுக்கு அலுவலகம் இருக்கிறது. அங்கு இருக்கும் நிலங் களில் பெரும்பாலானவை காடுகள் அல்லது மலைப் பகுதி என குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அங்கு பெரிய அளவில் வளர முடியவில்லை.

இந்தியாவின் மற்ற பகுதிகளி லும் பட்ஜெட் வீடுகளுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அவை விவசாய நிலங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கின்றன. விவ சாய நிலங்களை அழித்து வீடுகள் கட்ட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால் பயன்படுத்த முடியாமல் இருக்கும் இடங் களும் விவசாய நிலம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை நீக்கி, மனைகளின் எண்ணிக்கை யை அதிகரிக்கப்படுத்தும் பட்சத் தில் வீடு வாங்குபவர்களின் எண் ணிக்கை உயரும். தவிர வீடுகளின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் இரும்பு, சிமெண்ட், வேலை வாய்ப் புகள் என இதர சாதகங்களும் நிகழும். ஒவ்வொரு நிதிக் கொள்கை முடிவுகளின் போதும் வட்டி (ரெபோ)குறைப்பு செய்வது சாத்தியம் இல்லாதது. ஆனால் இன்னும் ஒரு முறை வட்டி குறைப்பு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என ஹர்ஷில் மேத்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT