வணிகம்

இவரைத் தெரியுமா?- ஒய் கே கூ

செய்திப்பிரிவு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்தவர்.

1997- ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தொடக்க செயல்பாடுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர். அதற்கு பிறகு 2008-2011 ஆண்டுகளில் விற்பனை மேம்பாட்டுக்காக மீண்டும் இந்தியாவில் நியமிக்கப்பட்டவர்.

இதற்கு முன்னர் ரஷியாவில் இயங்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தவர்.

சர்வதேச அளவில் விற்பனை மற்றும் சந்தையிடல் துறையில் அனுபவம் கொண்டவர். ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் 1984-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் 31 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பு மற்றும் விற்பனை திட்டமிடல், விநியோக விரிவாக்கம், விற்பனை உத்திகள், பிராண்ட் விளம்பரம், கிராமப்புற விற்பனை, பயன்படுத்திய கார் விற்பனை, விநியோகஸ்தர் மேலாண்மை முறைகளில் வல்லுநர்.

SCROLL FOR NEXT