சர்வதேச அளவில் 50 பெரிய வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. ஆனால் அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் (2016-17) ரூ.28.96 லட்சம் மட்டுமே. மற்ற தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய வங்கி களின் தலைவர் வாங்கும் சம்பளம் அருந்ததி பட்டாச்சார்யாவை விட பல மடங்கு அதிகமாகும்.
கடந்த நிதி ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சாந்தா கொச்சாரின் அடிப்படை சம்பளம் ரூ.2.66 கோடி. தவிர செயல்பாடுகளின் மீதான போனஸ் ரூ.2.20 கோடி. மேலும் சலுகைகள் ரூ.2.43 கோடி வழங்கப்பட்டது.
அதேபோல ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மாவின் அடிப்படை சம் பளம் ரூ.2.70 கோடி. செயல்பாடு களின் அடிப்படையில் மாறும் சம்பளம் ரூ.1.35 கோடி மற்றும் சலுகைகள் ரூ.90 லட்சம் வழங்கப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் யெஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரானா கபூரின் சம்பளம் ரூ.6.8 கோடி ஆகும். அதேபோல ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரியின் சம்பளம் ரூ.10 கோடி ஆகும்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பொதுத் துறை வங்கிகளின் சம்பளம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்த கருத்து முக்கியமானது. தனியார் வங்கிகளோடு ஒப்பிடும் போது, பொதுத்துறை வங்கிகளில் நடுத்தர பணியாளர்களுக்கு அதிக சம்பளமும், உயரதிகாரிகளுக்கு குறைவான சம்பளமும் வழங்கப் படுகிறது. பொதுத்துறை வங்கி களில் திறமையான பணியார் களைக் கொண்டுவர வேண்டும் என்றால் அதிக சம்பளம் வழங்கப் பட வேண்டும் என கூறியிருந்தார்.