வணிகம்

ரிலையன்ஸ் ஜியோவை மட்டும் பயன்படுத்துங்கள் : ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் உத்தரவு

பிடிஐ

பிற நிறுவனங்களின் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ரிலையன்ஸ் ஜியோ சேவையை மட்டும் பயன்படுத்து மாறு தனது ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பிற செல்போன் சேவை நிறுவ னங்களான ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவை யைப் பயன்படுத்தாமல் 40 ஆயிரம் ஊழியர்களும் ஜியோவை பயன் படுத்துமாறு கேட்டுக் கொண் டுள்ளது. பிற நிறுவனங்களின் செல் போன் சேவையைப் பயன்படுத்தும் ஊழியர்கள் மொபைல் நம்பர் போர் டபிலிட்டி (எம்என்பி) வசதியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ வுக்கு மாறுமாறு அறிவுறுத்தி யுள்ளது.

4ஜி சேவையில் மற்றொரு வியத்தகு சேவையை அளிக்கக் காத்திருக்கிறோம். எனவே நீங்கள் அனைவரும் அந்த சேவையைப் பெற தயாராகுங்கள் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன மனித வள பிரிவு அனைத்து ஊழியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார்ப்பரேட் திட்டத்தின் கீழ் ஏர்டெல் மற்றும் வோடபோன் சேவையை பெற்று வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சேவை ஊழியர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. இந்நிறு வனம் இதுவரை ரூ. 1.34 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது.

SCROLL FOR NEXT