வணிகம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் குழு இன்று கூடுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-வது கூட்டமாகும். புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடக்க இருக்கிறது. லாட் டரி மீதான வரி, அதீத லாபத்துக்கு எதிரான வரி, இ-வே பில், உள்ளிட்ட சில வரி விகிதங்கள் இன்று முடி வெடுக்கப்பட இருக்கின்றன. தவிர மேலும் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் (ஜூன் 11) ஜிஎஸ்டி கவுன்சில் கூட 66 பொருட் களுகான வரியில் மாற்றம் செய்தது. அனேகமாக ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பாக இந்த கவுன்சிலின் கடைசி கூட்டம் இதுவாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் கிடப்பில் இருக்கும் விதிகள் மற் றும் வரிகள் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

லாட்டரி வரி

கேராளா, சிக்கிம் மற்றும் மஹா ராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் லாட்டரி மூலம் கணிசமான வருமானம் பெருகின்றன. லாட்டரி மீதான வரி இன்று நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 28% வரி வரம்புக்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர செஸ் வரியும் இருக்கும். இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளின் வருமானம் பாதிக் காமல் இருப்பதற்காக கூடுதல் வரி அல்லது செஸ் விதித்துகொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிகிறது.

ஹைபிரிட் கார்களுக்கு வரி மறுபரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த வகையான கார்களுக்கு 43% வரி (28% ஜிஎஸ்டி + 15 செஸ் வரி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையினர், ஹைபிரிட் மாடல் கார்களுக்கு இந்த வரி விகிதம் அதிகம் என கருத்து தெரிவித்திருந்தனர்.

கடந்த வாரம் நடந்த கூட்டத் தில் இந்த வகையான கார்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என ஜேட்லி தெரிவித்திருந்தார். இன்று இந்த வகையான கார்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT