வணிகம்

டாடா-வின் திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்

பிடிஐ

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் திறன் மேம்பாட்டு மையத்தை தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் தொடங்கியுள்ளது. நிறுவனங்களின் சமூக பொறுப் புணர்வு திட்டத்தின் கீழ் (சிஎஸ்ஆர்) தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு ஸ்டிரைவ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குக்கட்பள்ளி எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தில் ஒரே சமயத்தில் 240 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். வேலை பயிற்சியின் தன்மைக்கேற்ப 6 வாரம் முதல் 16 வாரம் வரை பயிற்சிக்காலம் நீடிக்கும் தொழில் பயிற்சியும் இங்கு அளிக்கப்படும் என்று டாடா குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கார்ப்பரேஷன் (என்எஸ்டிசி) சான்றிதழ் அளிக்கப்படும். 13 மாநிலங்களில் 70 மையங்களை டாடா குழுமம் தொடங்கியுள்ளது. மும்பை, ஹைதராபாத், மொகாலி, புணே, அலிகாரில் இவை செயல்படுகின்றன.

SCROLL FOR NEXT