வணிகம்

அமெரிக்காவில் ஐ.பி.ஓ. வெளியிடுகிறது அலிபாபா

செய்திப்பிரிவு

சீனாவின் முக்கியமான ஆன்லைன் நிறுவனமான அலிபாபா குழுமம் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அலிபாபா நிறுவனம்.

பங்குச்சந்தையில் பட்டியலிடு வதற்காக ஆறு வங்கிகளுடன் அலிபாபா நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சிட்டி குரூப், டாய்ச்சு பேங்க், கோல்ட்மேன் சாக்ஸ், ஜே.பி.மார்கன், மார்கன் ஸ்டான்லி மற்றும் கிரெடிட் சூஸ்ஸி (Credit Suisse ) ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த ஐ.பி.ஓ. வெளியீடு நடவடிக்கையை செய்து கொடுக் கும் நிறுவனத்துக்கு 26 கோடி டாலர்கள் வரையும் கமிஷனாக கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இந்த ஐ.பி.ஓ.வுக்கு அலிபாபா முறை யாக விண்ணப்பிக்கும் என்று தெரிகிறது. ஜேக் மா தன்னுடைய 17 நண்பர்களுடன் சேர்ந்து 1999-ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

SCROLL FOR NEXT