வணிகம்

டிஎல்எப் மேல் முறையீடு: இன்று விசாரணை

பிடிஐ

டிஎல்எப் நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட 6 பேர் பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) விதித்த தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சிறப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயம் வியாழக்கிழமை விசாரிக்க உள்ளது.

பொதுப் பங்கு வெளியிட்டபோது முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சில தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரித்த செபி, அந்த புகார்கள் உண்மையென கண்டறிந்தது. இதையடுத்து நிறுவனத்தின் நிறுவனர் கே.பி. சிங் உள்ளிட்ட 6 பேர் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து சிறப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்ஏடி) மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 22-ம் தேதி இந்த மனு முதலில் விசாரணைக்கு வந்தபோது, செபி காலம் கடந்து விதித்த தடை காரணமாக பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 7,500 கோடி நஷ்டம் ஏற்பட்டதை டிஎல்எப் சுட்டிக் காட்டியிருந்தது.

SCROLL FOR NEXT