வணிகம்

ஏற்றுமதியை அதிகரிக்க உள்கட்டமைப்பு துறையில் கவனம் செலுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

பிடிஐ

ரூபாய் ஏற்ற இறக்கம் என்பது மிகச் சாதாரணமான நிகழ்வு. இதில் கவனம் செலுத்த வேண்டிய தில்லை. அதைவிட இந்திய ஏற்று மதியாளர்களுக்கு உள்கட் டமைப்பு, மூலப் பொருட்களின் விலை போன்ற பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற `ஹீரோ மைண்ட்மைன்’ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:

ரூபாயின் மதிப்பு என்பது ஒரு காரணி மட்டும்தான். இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதிக்கு திட்டமிடும் போது ரூபாயின் ஏற்ற இறக்கத்தை கணக்கில் கொண்டு திட்டமிட வேண்டும்.

மேலும் ரூபாய் மதிப்பு என்பது உங்களுக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அதைவிட மற்ற காரணிகள் மிக மோசமான நிலையில் இருக் கிறது. உதாரணமாக உள்கட் டமைப்பு, மூலப் பொருட்களின் விலை, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் என இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு அந்நியச் செலாவணி மாற்று விகிதம் மட்டும் காரணமல்ல. கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள கரன்சிகளில் நிச்சயமற்றத் தன்மை நிலவி வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 27.6 சதவீதமாக உள்ளது. பெட்ரோலியம் மற்றும் இன்ஜினீயரிங் துறைகள் கடந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட் டுள்ளன.

SCROLL FOR NEXT