சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 11 வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவின் துணை விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த வாரத்தில் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் ஜிஎஸ்டி விதிகள் இறுதி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளன. இதனால் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
இன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில அரசின் பிரநிதிநிதிகள் கலந்து கொள்வார்கள். சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி-களுக் கான விதிகளுக்கு ஒப்புதல் கிடைக் கும் என எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய மாநில அரசு அதிகாரிகள் குழு நேற்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டது. கூட்டத்தில் யூனியன் பிரதேசங் களுக்கான ஜிஎஸ்டி குறித்தும் ஆலோசிக்கப்படும்.