பிரெக்ஸிட் விவகாரத்தால் டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள ஸ்டீல் ஆலையை விற்கும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஜெர்மனியைச் சேர்ந்த தய்சீன்குரூப் ஏஜி (ThyssenKrupp AG) நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவது உள்ளிட்ட மாற்று வழிகளையும் கண்டறிந்து வருகிறது.
நேற்று முன்தினம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடைபெற்றது. இங் கிலாந்து ஆலையை விற்காமல் அதற்குரிய மாற்று வழிகளையும் நிலையான தீர்வையும் குறித்து ஆராய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள் ளாதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டாடா ஸ்டீல் நிறுவனம் மற்ற நிறுவனங் களோடு கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு பேச்சு வார்த் தையும் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் முதல் கட்ட அளவிலேயே இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருப்பதாகவும் தெரிவித் துள்ளது.
இயக்குநர் குழு கூட்டதுக்கு முன் இங்கிலாந்து தொழில் அமைச்சர் சஜித் ஜாவித்துடன் டாடா ஸ்டீல் தலைவர் சைரஸ் மிஸ்திரி உட்பட மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
இங்கிலாந்தில் நஷ்டத்தில் இயங்கும் உருக்கு தொழிலி லிருந்து வெளியேற டாடா ஸ்டீல் முடிவெடுத்தது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து ஆலையை விற்பதாக அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது. மே மாதம் ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், லிபிடர்டி ஹவுஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களை இறுதி செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.