தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ஆராய்ச்சி துறையில் முன்னணியில் உள்ள குளோபல் லாஜிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை வர்சூஸா நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்த நிறுவனத்தில் 14 ஆண்டு காலம் பணி புரிந்தவர்.
பஞ்சாப் இன்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பைனான்ஸ் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
எல் அண்ட் டி நிறுவனத்தில் சிஸ்டம் அனலிஸ்டாக பணிக்குச் சேர்ந்தவர்.
செரனோவா நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியில் இருந்தவர். சூழலியல் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்துபவர்.