நடப்பு நிதி ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து சம்பளம் எதுவும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
நிறுவனத்தில் கடன் அதிகமாக இருக்கிறது. அதேசமயத்தில் தர மதிப்பீட்டு நிறுவனமும் தகுதியைக் குறைத்திருக்கும் நிலையில் அனில் அம்பானி இந்த முடிவினை எடுத்திருக்கிறார். தவிர நிறுவனத்தின் முக்கிய உயரதிகாரிகளும் தங்களது சம்பளங்களை குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு வரும் டிசம்பர் வரையில் செயல்படும்.
10-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு சரியான நேரத்தில் கடனுக்கான தவணைத் தொகையை இந்த நிறுவனம் செலுத்தவில்லை என்பதால் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தகுதியை குறைத்தன. கடனை சரி செய்வதற்காக 7 மாதம் வரை ஆர்.காம் அவகாசம் கேட்டிருக்கிறது.